Thursday, November 17, 2011

Android music store

கூகுளின் 'மியூசிக் ஸ்டோர்' பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது
(Android music store)












Google senior product manager Michael Siliski introduces the company's digital music store. Photograph: Jae C Hong/AP

அண்ட்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் Laptop மற்றும் கையடக்கத்தொலைபேசிகளுக்கென 'ஒன்லைன் மியூசிக் ஸ்டோரினை'கூகுள் நேற்று வெளியிட்டது.

எனினும் தற்போது அமெரிக்காவில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படவுள்ளது.

இது சற்று ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. இருப்பினும் இன்னும் சிறிது நாட்களில் மற்றைய நாடுகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் ஊடாக அண்ட்ரோயிட் பாவனையாளர்கள் எம்.பி3 கோப்புகளை வாங்கவும், தரவிறக்கவும், ஸ்ட்ரீம் செய்யவும் முடியும்.

இச் சேவையில் மொத்தம் 13 மில்லியன் பாடல்கள் வரை உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெவ்வேறு விலைகளில் பாடல்கள் இதில் காணப்படுகின்றன.


அப்பிளின் ஐ டியூன்ஸிற்கு தகுந்த போட்டியளிக்கும் வகையிலேயே கூகுள் இதனை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சேவையை கூகுள் தனது கூகுள் + சமூக வலையமைப்புடனும் இணைத்துள்ளது.

இதன்மூலம் கூகுள் + நண்பர் வட்டத்துடன் பாடல்களை பகிர்ந்துகொள்ள முடிவதுடன் அவர்கள் கட்டணமின்றி அப்பாடலை முழுமையாக ஒருதடவை கேட்டு ரசிக்க முடியும்.

மேலும் புதிய இசைக்கலைஞர்கள் தமது பாடல்களை சந்தைப்படுத்த முடிவதுடன் அவற்றினை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபத்தின் குறிப்பிட்ட பங்கினை கூகுளுக்கு வழங்க வேண்டும்.

கூகுள் இதிலிருந்து பெரிதாக வருமானம் எதனையும் ஈட்டப் போவதில்லை. எனினும் தனது அண்ட்ரோட்டின் பிரபல போட்டி நிறுவனங்களான பிளக்பெரி, அப்பிள் போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேவையை தமது பாவனையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கி வருவதாலேயே கூகுளும் இவ் வசதியினை ஆரம்பித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகில் அதிகமாக விற்பனையாகிவரும் கையடக்கத்தொலைபேசிகளாக அண்ட்ரோயிட் மாறியுள்ளது.

இதுவரை சுமார் 200 மில்லியன் சாதனங்கள் இதன்மூலம் இயங்குவதுடன், நாளந்தம் 500,000 க்கும் அதிகமான சாதனங்கள் தினசரி விற்பனையாகி வருவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
___

No comments:

Post a Comment